நரேந்திர தபோல்கர் படுகொலையில் இந்துத்துவா தீவிரவாதிதான் முக்கிய குற்றவாளி... குற்றப்பத்திரிகையில் சிபிஐபுனேவைச் சேர்ந்த சமூக சேவகரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர் கொலையில், சனாதன் சான்ஸ்தான் என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான விரேந்திர தாவ்டே முக்கிய குற்றவாளி என சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்ற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமூக சேவகரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி புனேயில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க தாமதமானது. இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சனாதன் சான்ஸ்தான் என்ற இந்து அமைப்பின் உறுப்பினர் விரேந்திர தாவ்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தபோல்கர் கொலையாளியாக சிபிஐ வினய் பவார், சாரங் அகோல்கர் ஆகிய இருவரும் சனாதன் சான்ஸ்தானின் உறுப்பினர்கள் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது. அகோல்கர் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவார் மீது இது போன்ற குற்றப் பின்னணிகள் எதுவும் இல்லை என்றாலும் 2009ம் ஆண்டில் இருந்து இவர் எஸ்கேப் ஆகி எங்கேயோ மறைந்திருக்கிறார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளை விரட்ட கடுமையான ஒரு சட்டம் தேவை என்று தீவிரமாக போராடி வந்த தபோல்கரை கொலை செய்வதற்கான வேலை தாவ்டேவிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.