இந்து மதம் மனிதர்களை எப்படியெல்லாம் பிரிக்கிறது பாருங்கள் - வீடியோஉலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது,
கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்,
கடவுள்களும், மந்திரங்களும் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை.
(ஆக பிராமணர்களே ஹிந்து மக்களின் கடவுளாவார்)
(ரிக் வேதம்: 62:10)

பிரம்மா தம் முகத்திலிருந்து பிராமணர்களையும், தோளிலிருந்து சத்தியர்களையும், தொடையிலிருந்து வைசியர்களையும், காலிலிருந்து (பாதத்திலிருந்து) சூத்திரர்களையும் படைத்தார். (மனு தர்மம் 2:35)
இஸ்லாத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களும் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்துள்ளது! இஸ்லாம் மட்டுமே மனிதர்கள் எவரும் சிறந்தவர்கள் இல்லை! தன்னைப் படைத்த இறைவனாகிய “அல்லாஹுவுக்கு அஞ்சுபவர்களைத் தவிர” என்ற கோட்பாட்டை வைத்துள்ளது.
மனிதன் தன்னைப் படைத்த இறைவனாகிய அல்லாஹுவுக்கு அஞ்சும்போதுதான் பிறரை இழிவாக நினைக்கமாட்டான். என்னைப்படைத்த அல்லாஹுதான் இவனையும் படைத்தான் என்று நினைக்கும் போதுதான் பிறரை தனக்கு அடிமையாக்குவதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வான்.
மனிதன் தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சாதவரை சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்பதை நமது “பெரியார்” நட்புகளுக்கு நாம் சொல்லிக்கொள்கின்றோம்.
இல்லை! இல்லை!! கடவுளே இல்லை என்று இஸ்லாத்தின் பாதி கொள்கையை ஏற்றுக்கொண்ட நமது பெரியாரின் நட்புகள் “அல்லாஹுவைத்தவிர” என்ற இன்னொரு பாதி கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை துடைத்தெறியும் சக்தி இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை ஐய்யா. சுப.வீரபாண்டியன் அவர்களும், ஐய்யா அறிவுக்கரசு அவர்களும் நன்கு பகுத்தறிய வேண்டும்.
யார் சிறந்தவர்?
அல்லாஹுவைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்துவிடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 09:109)
படைத்த இறைவனை அஞ்சக்கூடிய, அந்த இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி வாழக்கூடியவன்தான் சிறந்தவன் என இறைவேதம் அல்குர்ஆன் கூறுகின்றது.
(இந்த அருமையான காணொளி. ஈ.வே.ரா. பெரியாரின் 130வது பிறந்த நாள் விழா சிறப்பு குறும்படமாக 2008ல் வெளியிட்டது பெரியார் வலைக்காட்சி).


-Sulthan seaport.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.