ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்முத்துப்பேட்டை ரஹ்மத்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்யா தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியை ஜென்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது, வருமுன் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளிடம் விளக்கி பேசினார். பின்னர் டெங்கு காய்ச்சல் மற்றும் அறிகுறி குறித்து மாணவிகள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இதில் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.