ஓசூரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் நகர தலைவர் வெட்டிக் கொலை..விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஓசூர் நகர தலைவர் சூரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் ஓசூர் நகர தலைவராக இருந்தார் சூரி. இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில் இரயில் நிலையம் அடுத்த டிஎஸ்பி வீட்டின் எதிரே உள்ள நேரு நகர் என்ற இடத்தில் மர்மநபர்கள் சூரியை வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரியை வெட்டுக் கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து இளைஞர் எழுச்சி பேரவை கோரிக்கை விடுத்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.