முத்துப்பேட்டை அருகே இந்து முன்னணியினரின் வெறிச்செயல் கிறிஸ்துவ மத போதகர்களுக்கு அடி-உதை கார் உடைப்புமுத்துப்பேட்டை அருகே மத போதகர்கள் 4 பேருக்கு அடி-உதை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபகாலமாகவே நாட்டில் எல்லா பகுதியிலும் சிறுபான்மையினரை தாக்குவது   தொடர்ந்தவண்ணமாகவே உள்ளது  அதில் ஒரு பகுதியாக  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது போலும்

முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை பகுதி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் கணேசனுக்கு உடல் நிலை குணமடைவதற்காக வடபாதி மங்கலம் பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் (55), கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த கோபி (36), நாகன்குடி பகுதியை சேர்ந்த வடிவேல் (45), திருவாரூர் பகுதியை சேர்ந்த மணி (40) ஆகிய 4 கிறிஸ்துவ மத போதகர்களை ஜெபம் செய்வதற்காக அழைத்து வந்தார்கள். இதையடுத்து சன்னதி தெருவை சேர்ந்த 10 பேர்  கொண்ட  கும்பல் மதபோதகர்கள் இங்கு வரக்கூடாது, அவர்கள் மதப்பிராசாரம் செய்ய வந்துள்ளனர் என்று அவர்களை திரும்பி அனுப்பிவிட்டனர்.

இதனால் வந்த 4 பேரும் காரில் திரும்பி சென்றுவிட்டனர். முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் அவர்கள் காரை வழிமறித்து, காரை  உடைத்து அவர்கள் 4 பேரையும் சரமாரி தாக்கியுள்ளனர்.  இதனால்  மத போதகர்கள் படுகாயம் அடைந்தனர்  அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போர்க்களம்போல் காட்சியளித்தது

இது குறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த  நான்குபேர்களையும்  மீட்டு திருத்துறைபூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலைவெறி  சம்பவத்திற்கு பல சமூக அமைப்புகளும் கிறிஸ்துவ அமைப்புகளும் கண்டனங்களை தெரியப்படுத்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.