முத்துப்பேட்டை பேட்டை ரோடு சாலையை சீரமைக்காவிடில் மக்களை திரட்டி மறியல் போராட்டம் : தமுமுக எச்சரிக்கை முத்துப்பேட்டை பேட்டை ரோடு சாலையை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமுமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.  முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் சம்சுதீன் தலைமையில் துணை செயலாளர் சீமான், முன்னாள் தலைவர் தாவூது, மமக நகர செயலாளர் ஹாமீம் உள்ளிட்டோர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், முத்துப்பேட்டை பங்களா வாசலில் இருந்து பேட்டை சிவன் கோயில் வரை உள்ள சிமென்ட் சாலைகள் பள்ளமும், குழியுமாக பழுதடைந்து பல வருடங்களாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், வழிபாடு தளங்களுக்கு செல்ல கூடியவர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அடிக்கடி மின் தடை அதிகம் ஏற்படுவதால் இரவு நேரங்களில் வயதானவர்கள் தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. பேரூராட்சி நகர பகுதியில் ஏ கிரேடு நிர்ணயித்து வரி வசூல் செய்யும் பேரூராட்சி நிர்வாகம், நகர பகுதியில் இருக்கும் பேட்டை சாலையை சீரமைக்காமல் பல காரணங்களை கூறி மக்களை அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த மனு பெறப்பட்ட 15 தினங்களுக்குள் பழுதடைந்த சாலையை சீரமைப்பதற்கு பணி துவங்கப்பட வேண்டும். அப்படி துவங்காமல் இருந்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அந்த  மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.