ஷார்ஜாவில் ஆன்லைன் ஈசேவை மூலம் டிரைவிங் லைசென்ஸ்ஷார்ஜாவில் இனி இறுதிக்கட்ட சாலை ஓட்ட சோதனையை (Final Road Test) முடித்த ஒட்டுனர்கள் தங்களுடைய புதிய லைசென்ஸை பெற்றுக் கொள்ள இனி ஷார்ஜா போக்குவரத்து உரிமங்கள் வழங்கும் அலுவலகங்களுக்கு (Sharjah Traffic and Licensing Department) சென்று அலைய வேண்டியதில்லை மாறாக ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் கூரியர் மூலம் உங்களைத் தேடி வரும் என்றும் இனி பணமாக சேவை கட்டணங்களை செலுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா போக்குவரத்து உரிமங்கள் வழங்கும் துறையின் மின்னனு சேவையை (e-service) பெற்றிட என்ற இணையதளத்தின் www.moi.gov.ae வழியாகவும், மொபைல் போன் ஆப் வழியாகவும் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, ரோடு டெஸ்ட்டையும் ஆன்லைன்ல ‘இப்போதைக்கு’ எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பு, இன்னும் கொஞ்ச காலம் போச்சுன்னா எகிறும் டெக்னாலஜில அதுவும் சாத்தியந்தான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.