முத்துப்பேட்டை அருகே லாரி ஏறி ஒருவர் பலி!முத்துப்பேட்டையை அடுத்து  தம்பிக்கோட்டையை சேர்ந்த வீரா மற்றும் வீரயன் ஆகியோர் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் வீரயன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் உடலை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் வீரா மேல்சிகிச்சைக்காக வேண்டி தஞ்சாவூர் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிரை காவல்துறை தரப்பில் கூறுகையில் “இரவுநேரத்தில் சரிவர தூங்காமல் லோடு ஏற்றிவந்ததால் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்பொழுது நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.