F.I.R பதிவு செய்வதில் புதிய மாற்றம்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!



எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் காவல் நிலைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர்கள் அமைப்பு ஒன்று தொடர்ந்திருந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் அடங்கிய அமர்வு காவல் துறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் காவல் நிலைய இணையதளத்தில் அது பதிவேற்றம் செய்யப்படுவதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

போதுமான அளவிற்கு இணையதள வசதிகள் இல்லாத நாகாலாந்து, மிசோரம், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களின் 48 மணிநேரத்தில் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். நவம்பர் 15-ம் தேதிக்குள் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு ஆணையிட்டுள்ளது.

தீவிரவாதம், பாலியல் புகார் போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவுவேற்றம் செய்வதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.