காவிரி விவகாரத்தில் அரசியல் மாச்சர்யங்களை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காவிரியில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு திறந்து விட கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த அளவு நீரானது தமிழகத்திற்கு போதுமானதாக இல்லை. மேலும் கூடுதலான நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். எனவே கூடுதல் நீரை திறந்துவிட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்களை அம்மாநில அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நடத்தி வருகின்றன. மேலும் தமிழக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு வாழும் தமிழர்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.எனவே அங்கு வாழுகின்ற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமையை நிலை நாட்டும் வகையிலும், அனைவரின் ஆலோசனைகளை பெறும் வகையிலும் உடனே அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு கண்டும் காணாமல் மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தருவதோடு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனே அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.