J N U மாணவர் தேர்தலில் இடது சாரி அமைப்புக்கள் வெற்றி.. பார்ப்பனீய ஏ பி வி பி படு தோல்வி??



ஜெ என் யு மாணவர் தேர்தலில் இடது சாரி அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி.. பார்ப்பனீய ஏ பி வி பி படு தோல்வி??
சுமார் 5000 மாணவர்கள் வாக்களித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்ட இடது சாரி மாணவர் அமைப்பு கூட்டணி கிட்டத்தட்ட அனைத்து மட்டங்களிலும் வெற்றிபெற்று மாணவர் சங்கத்தில் தனது பலத்தை நிரூபித்துள்ளது ..இவர்களுக்கு கடும் போட்டியாக கருதப்படும் ரோஹித் வெமுலா தற்கொலை தூண்டுதல் வழக்கில் இருந்து , இன்னும் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பார்ப்பனீய செயல்பாடுகளை புகுத்திவரும் மோடி அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏபிவிபி அமைப்பு அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது..
அதிலும் குறிப்பாக இதற்கு முன்னர் தனது கோட்டையாக விளங்கிய பல இடங்களையும் இழந்துள்ளது.,.

சுமார் 15 இருக்கைக்கு நடந்த தேர்தலில் 14 இருக்கைகளை இடதுசாரி மாணவர் அமைப்புக்கள் வெற்றிபெற்றுள்ளன.. மீதமுள்ள ஒரு இடத்தை மட்டும் பார்ப்பனீய ஏபிவிபி அமைப்பு வென்றுள்ளது.. அந்த இடமும் கூட பிராமண சமூகம் ஆதிக்கமுள்ள சம்ஸ்கிருத மொழிப்பிரிவில் மட்டும் தான் ??
ஜெ என் யு கான்ஹியா குமார் ,உமர் காலித் போன்ற மாணவர்களை மோடி அரசு கைது செய்து தேச துரோக குற்றம் சாட்டியதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றது.. மோடி கூட்டத்தின் பார்ப்பனீய போக்கை எதிர்த்து வீரியமான போராட்டத்தை ஜெ என் யு மாணவர்கள் நடத்தினர்.. இதன் மூலம் மோடி அரசு தனது பொய்களை மூட்டை கட்டி வைத்து விட்டு கன்ஹயா குமார் உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது.. இதன் காரணமாக ஜெ என் யு வை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் பார்ப்பனீய சிந்தனையாளர்கள் கூட்டமாக ஏபிவிபி மாணவர்கள் மத்தியில் முழு செல்வாக்கையும் இழந்தது இந்த தேர்தலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.