சட்டமன்றத்தில் மதநல்லிணக்க குரலை உயர்த்திய தமிமுன் அன்சாரி MLAபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மானிய கோரிக்கைகளில் பேசும்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் சமூக நல்லிணக்கத்தை மேலும் செம்மைப்படும் வகையில் முன்னோட்டமாக சில கருத்துகளை பேசினார்.

அவர் பேச்சை தொடங்கும்போது சமூக நீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் குரல் கொடுத்த அம்பேத்கர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர்மகனார், காமராஜர், தோழர் ஜீவா, MGR, முன்னால் பிரதமர் V.P.சிங் ஆகியோரின் பெயர்களை வரிசைப்படுத்தி அவர்களையெல்லாம் நன்றியோடு நினைத்து பார்ப்பதாக கூறினார்.

அதுபோல 69% இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டிற்கு பெற்று கொடுத்ததற்காக தமிழக முதல்வர் அம்மா அவர்களையும் பாராட்டினார்.

அப்போது அவையை பார்த்து "நீங்கள் எனது சகோதர, சகோதரிகள்..! என்னுடைய மாமன், மச்சான்கள்..! என்னுடைய அக்கா, அண்ணிகள்..! நமது இந்த உறவுகள்தான் நமது பண்பாடு! நமது கலாசாரம்! அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்லும் சொத்துக்கள் இவைதான்.

நாங்கள் உங்களுக்கு பண்டிகைகளின்போது பிரியாணி கொடுப்பதும், நீங்கள் எங்களுக்கு பொங்கல் விருந்து கொடுப்பதும், கிரிஸ்துமஸ் கேக்குகளை நாம் எல்லோருக்கும் பரிமாறி கொள்வதும் நம் உறவுகளை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறது. இத்தகைய பண்பாடுகளை, உறவுகளை, நல்லிணக்கத்தை காக்கக்கூடிய ஒரு பெரும் பொறுப்பு இந்த அவையில் இருக்கக்கூடிய நம் அத்தனை பேருக்கும்  உண்டு.

இப்படி அவர் பேசியதும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேசையை தட்டி ஆராவரித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக நீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்ற தோணியில் அவர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.