யமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறைஅரபு நாட்டின் உணவு வகைகளை இந்த பகுதியில் அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்.பல நாடுகளில் வசிக்கும் என் இந்திய நட்புள்ளங்களுடன் இதனை பகிர்ந்து கொள்ள ஆசை.

லஹம் மந்தி -இது லைட் மசாலாவில் அவித்த மட்டன் ரைஸ்.

இந்த மந்தி ரைஸ் என்பது கிட்டதட்ட பிரியாணி மாதிரி தான்,

 ஆரோக்கியமானதும் கூட.எண்ணெய் நெய் குறைவாக மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காமல் அதன் அசல் சுவையிலேயே இருக்கும்.

செய்முறை   :
என்னவோ சிம்பிள் தான்,எண்ணெயில் வெங்காயத்தை வதக்கனும்,சிக்கன் அல்லது மட்டனை போட்டு வேகவைக்கனும்,கரம் மசாலா வகையறா,குங்கும பூ  (சஃப்ரான்) ,காய்ந்த எலுமிச்சை,சிக்கன் ஸ்டாக்,உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அரிசியை தட்டி சிம்மில் வைத்து வேக வைத்து ,அங்கஙகு லெமன் யெல்லோ,ஆரஞ்ச் ரெட் கலர் சேர்த்து கிளறி,விரும்பினால் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து போட்டால் மந்தி ரைஸ் ரெடி.ரைஸ் தனியாக ரெடி செய்து விட்டு,சிக்கன் அல்லது மட்டனை கிரில் செய்தும் வைக்கலாம்.
மீன்  கிரில் மந்தி ரைஸும் செய்யலாம் .

சைட்டிஷ் :
வெஜ் சாலட்,தக்காளி,வெங்காயம்,சிவப்பு மிளகாய்,உப்பு சேர்த்து கலந்து செய்த ஒரு தக்காளி பச்சடி மாதிரியும் தராங்க,டேஸ்ட் பிடிச்சிருந்தால் ஜமாய்க்கலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.