மாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967உலகில் எங்கேல்லாம் ஆநீதி நடக்கிறதோ அங்கேல்லாம் நான் இருப்பேன் ' அல்லல் படும் அடிமை மக்களுக்கு ஆதரவு குரல்
எழுப்பிய மாவீரன் ஒய்ந்த தினம் இன்று  09-10-1967

அமெரிக்காவின் ஜன்னல் ஓரோத்திலிருந்த எட்டி பார்க்கும் அளவில் கியூபா எனும் ஒரு நாடு, அதில் ஒரு தீப்பந்தம் எரிந்து கொண்டீருந்தது அது ஏகத்தியபத்தியத்தின் குடல் நடுங்க வைத்தது

அமெரிக்காவின் அடிமைதனத்திலிருந்து மட்டும்மல்ல உலகில்
அமெரிக்கா போன்ற நாடுகளின் அடிமைதனத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களை விடுவிப்பது தனது வாழ்வின் லட்சியமாக கொண்டவர்

உலகில் எங்கேனும் அநீதி நடந்தால் அதை தட்டி கேட்க நீ
துணிந்தால் ' நீ என் தோழன் ஆவாய்

அநீதிக்கு எதிராக களம்கண்டால் நீ வேறு நான் வேறு இல்லை என்றும் போராளிகள் அனைவரும் ஒரு இனம் என உலகுக்கு
பறைசாட்டியவர்

அவர் தான் சேகுவேரா :

சேகுவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஆக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், போராளி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

சேகுவேரா தங்கிய தத்துவங்கள் :

* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள், அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும் !

* மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல் !

* எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் !

* போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை, நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் !

* விதைத்துக்கொண்டே இரு ' முளைத்தால் மரம்
இல்லையேல் உரம் !

* விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை !

* எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் !

* எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான் !

* ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது !

* நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும் !

* நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான் !

* புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும் !

இப்படி பல புரட்சிகர சிந்தனைக்கு சொந்தகாரர் தான்
சேகுவோர ; சே என்றால் தோழர் என்று அர்த்தம் அதனால் தன் பெயருடன் சே சேர்த்து கொண்ட குவேரா சேகுவேரா என அறிப்பட்டார் இறுதியில் அமெரிக்காவின் பிடியிலிந்து பொலிவியவை மீட்க போராடி போது அமெரிக்கா சி.ஐ.ஏ.பயிற்சி பெற்ற பொலிவியப் படையால், சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்

போராளிகள் கொல்லபடுவதில்லை
எதிரிகளால் விதைக்கப்படுகிறாரர்கள் !!!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.