உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை..!உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஆண்டு சிறை கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த கைதிகள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தங்களை தமிழ்நாடு சிறை விதியில் கூறப்பட்டுள்ள உரிமையின் படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு உயர் நீதிமன்ற வழக்கு, அரசாணைகளை காரணங்காட்டி அவர்களின் விடுதலை உரிமையை மறுத்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விசயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கிளை, ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறப்பானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகவே, தமிழக அரசு உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய சட்ட விதிகளில் உள்ள உரிமையின் படியும், நல்லெண்ண அடிப்படையிலும் தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் அனைத்து ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய முன்வர வேண்டும். தொடர்ந்து அரசாணை, வழக்கு என இழுத்தடிப்புகளை மேற்கொள்ளாமல் விடுதலை நடவடிக்கையை விரைவாக தொடங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.