திருத்துறைப்பூண்டியில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு 15 பேர் கைதுகாவிரி பிரச்சினையில்
தமிழகத்துக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும் பிரதமர் மோடி செயல்படுவதாக கூறி திருத்துறைப்பூண்டியில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவவடிவேல், அறிவியல் பேரியக்க சங்க தலைவர் ஜெயபால், உழவர் பேரியக்க முன்னணி நிர்வாகி பழனிகுமார், நிர்வாகிகள் தனபால், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்த 15 பேரை கைது செய்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.