16 வயது அடைந்தவர்களுக்கும் அமீரக ஒட்டுனர் உரிமம் வழங்க பரிசீலணை !அமீரகத்தில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது அந்த வயது வரம்பை 16 ஆக குறைக்க அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது, மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களைவிட இன்றைய இளைஞர்கள் சிறப்பான முறையில் வாகனம் ஓட்ட முடியும் என்பதால் அவர்களுக்கு உரிமம் வழங்க மறுப்பது நியாயமல்ல என மேஜர் ஜெனரல் முஹமது சைஃப் அல் ஜபீன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல குடும்பங்கள் வெளிநாட்டு ஓட்டினர்களை நம்பியிருக்கும் நிலையில், 16, 17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கினால் அவர்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான நேரத்தில் உதவுவதுடன் அவர்களை கூடுதல் பாதுகாப்புடனும் வாகனத்தில் அழைத்து செல்வார்கள் என்றும், அதிகமான விபத்துக்களை ஏற்படுத்துவதே சராசரியாக 24 வயது முதல் 35 வயதுடையவர்களே என்று ஆய்வுகள் தெரிவிப்பதாலும் 16 வயது இளைஞர்களுக்கு உரிமம் வழங்கலாம் என அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.