சசிகுமார் கொலை வழக்கு சந்தேகத்தில் சிக்கிய 2 பேர் விடுவிப்புகோவை துடியலூர் அருகேயுள்ள சுப்ரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (36). இந்து முன்னணி நிர்வாகியான இவர், சுப்ரமணியம்பாளையம் ரோட்டோரத்தில் மர்ம நபர்களால் கடந்த மாதம் 22ம் தேதி வெட்டி கொல்லப்பட்டார்.
 இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சி.பி.சி.ஐ.டி போலீசார் 4 பேர் போட்டோக்களை வெளியிட்டனர். சசிகுமார் ெகாலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரம் முன், காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் தனது தம்பி தனபாலுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி பேக்கரி கடையில் இவர்களை கண்காணிப்பது போல் நின்றிருந்த 4 பேரின் போட்டோ கண்காணிப்பு கேமரா மூலமாக பெறப்பட்டது.  இதில், 2 பேரின் அடையாளம் தெரிந்தது. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரும் பேக்கரியில் இனிப்பு மற்றும் பலகாரம் வாங்க வந்த விவரம் தெரியவந்தது. பலகாரம், இனிப்பு வாங்கி கொண்டு இவர்கள் பைக்கில் சென்ற விவரங்களை போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, 2 பேரும் சந்தேக வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமாரி, ஏ.எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணைக்காக சென்னையில் இருந்து கோவை வந்தனர். கோவையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சசிகுமார் கொலைக்கான ஆதாரம் பெற பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி காட்சிகளை ஒப்படைக்க உதவி செய்யவேண்டும். குறிப்பாக, சிக்னலில் போலீசார் அமைத்துள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.