காவி கல்விக் கொள்கை வரைவு 2016 திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் - நாராயணசாமிமத்திய அரசுக் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என்று
முதல் அமைச்சர் நாராயணசாமி - மனிதநேய மக்கள் கட்சியிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்

இந்திய நாட்டின் பன்முகத் தன்மை, மதச்சார்பின்மை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு எதிராக மத்திய பாஜக அரசுக் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 திட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் எதிர்த்து வரும் நிலையில் புதுச்சேரி அரசு தேசிய கல்வி கொள்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக வந்த செய்தியை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், தமுமுக புதுச்சேரி மாநில செயலாளர் அலாவுதீன் ஆகியோர்களின் ஆலோசனையின் படி புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமியை மமக புதுச்சேரி மாவட்ட செயலாளர் பஷீர் அஹமது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர், அதுபோல் காரைக்கால் வருகை தந்த புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணனை காரைக்கால் மாவட்ட தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தமுமுக மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜ்முதீன், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மத்திய அரசுக் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்தக்கூடாது எனவும், இத்திட்டத்தை புதுச்சேரி அரசு எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

பின்னர் மமக நிர்வாகிகளிடம் பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் "புதுச்சேரி அரசு அனைத்து சமூக மக்களின் நலனை காக்கும் அரசாகவே செயல்படும், மத்திய அரசுக் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 திட்டத்தை கொள்கை அளவில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, எனவே தேசிய கல்விக் கொள்கையை கண்டிப்பாக புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம்" என வாக்குறுதி அளித்தார். இதே வாக்குறுதியை கல்வி அமைச்சர் கமலக்கண்ணனும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் எஸ்.பி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், தெற்கு தொகுதி செயலாளர் முஹம்மது இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், தமுமுக நகர செயலாளர் கமால் ஹுசைன், இளைஞரணி மாவட்ட செயலாளர் சர்புதீன், நகர செயலாளர் முஹம்மது மாசிம், மாணவ இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக நடைபெற்ற காரைக்கால் மாவட்ட நிர்வாக குழுவில் மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் " தேசிய கல்விக் கொள்கை வரைவு 2016 " திட்டத்தை எதிர்த்து காரைக்காலில் வரும் 22.10.2016 சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன கூட்டம் நடத்துவது எனவும், இக்கண்டன கூட்டத்தில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனியார் கல்வி நிறுவங்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.