செல்ஃபி மோகம் - ஓமனில் 2 இலங்கை மாணவிகள் நீரில் முழ்கி பலி !நேற்று சனிக்கிழமை மாலை ஓமனின் பிரசித்தி பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான 'ஸலாலா' (Salala) நகரிலிருந்து 15 கி.மி தொலைவிலுள்ள 'அய்ன் ஜர்ஜிஸ்' எனும் நீர்நிலை (Ain Jarziz Water Spring) அருகே குடும்பத்துடன் பிக்னிக் சென்ற 2 இளம் பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்து நீரில் முழ்கி இறந்தனர்.

ஸலாலாவிலுள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் பயிலும் ஸைனப் (Zainab) மற்றும் ரூவன் (Ruwan) என்கிற இந்த இலங்கை மாணவிகளுக்கு (இருவருக்கும் வயது சுமார் 13) நீச்சல் தெரியாததுடன் அவர்களுடன் சென்ற பெற்றோர்களுக்கும் நீச்சல் தெரியாது என்பதால் 15 கி.மி தூரத்திலிருந்து உதவிக்குழுக்கள் வந்து சேருமுன் இருவரும் முழ்கி இறந்தனர்.

ராயல் ஓமன் போலீஸாரின் அறிவிப்பின்படி, ஒமனில் நடைபெற்ற முதல் செல்ஃபி இறப்புக்கள் இதுவே என தெரிகிறது என்றாலும் உலகெங்கிலும் இந்த பைத்தியக்கார பழக்கமான செல்ஃபியால் ஏற்படும் மரணங்கள் சகட்டுமேனிக்கு அதிகரித்து வருகின்றன.

ஆபத்தான செல்ஃபிக்களைவிட உங்கள் உயிர்கள் முக்கியமாவை என உணருங்கள் சக உயிர்களே!

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.