முத்துப்பேட்டையில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ தொப்பியை 2 மணி நேரம் சுமந்த போலீசார்......திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூத்த குடிமக்கள் இயக்கம் சார்பில் அப்துல் காலம் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொ) ஜோதி முத்துராமலிங்கம், எஸ்ஐ கபீர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந் நிகழ்ச்சியில் இருவரும் தங்களது தொப்பிகளை தலையில் அணியாமல் உடன் வந்த காவலர்களிடம் கொடுத்து விட்டனர்.

இதனால் 2மணி நேரத்திற்கும் மேலாக அந்த காவலர்கள் வேறு பணியை செய்யாமல் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர் ஆகியோர் அருகிலேயே கை கடுக்க காத்து நின்றனர். போலீஸ் அதிகாரிகளின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.