ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த வட மாநில 2 இந்து இளைஞர்கள் கைதுரெயில் பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த வட மாநில இந்து  இளைஞர்கள்  2 பேர் கைது  லேப்டாப், செல்போன் மற்றும் பணம் பறிமுதல்

ரெயில் பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை அடித்த வடமாநில இந்து   ஆசாமிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர் புகார்கள்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து மர்ம ஆசாமிகள் பயணிகளின் உடமைகள் மற்றும் பொருட்களை திருடுவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பயணிகள் உடைமைகளை திருடும் ஆசாமிகளை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவில்லாத பெட்டிகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் 2 பேர் ரெயில் பெட்டிகளில் சுற்றி திரிந்தனர்.

மயக்க மருந்து
அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மயக்க மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்கள், மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டுகளும் இருந்தன.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடியான விசாரணையில் 2 பேரும் ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சத்ராஜித் (வயது 35) மற்றும் சாதுசிங் (34) என்பது தெரியவந்தது. சத்ராஜித் மற்றும் சாதுசிங்கிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
இது குறித்து ரெயில்வே போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும் ரெயில்களில் பல வருடங்களாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நாங்கள் நடத்திய சோதனையில் 2 பேரும் சிக்கினர் என்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்–டாப்கள், செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.