மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு ஜெயில். 2.27 கோடி சுவாகா....மூலிகை பெட்ரோல் விற்று பொதுமக்களிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராமர் பிள்ளை உள்பட 5 பேர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகையின் மூலம் பெட்ரோல் தயாரிப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமர் பிள்ளை, பொதுமக்களிடம் ரூ.2.27 கோடி அளவில் மோசடி செய்ததாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ராமர்பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

 மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை யாரிடம் வசூல் செய்வதன்று கூறவில்லை  இதுதான் இந்திய சட்டம்  இதில் பொது சிவில் சட்டம் வேறு வேணுமாம் ......  

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.