3 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி அறிவிப்புமனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:--

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி  திருப்பரங் குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடை பெறவிருக்கும் இடைத் தேர்தலில் திராவிட முன் னேற்ற கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சி யின் தலைமை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.

ஆக்கபூர்வமான எதிர் கட்சி யாக தமிழக சட்ட மன்றத்தில் பணியாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.