ராம்குமாரின் உடலில் 6 இடங்களில் காயம்! - அதிர்ச்சி தகவல்!கடந்த செப்டம்பர் 18ம் தேதி மாலை 4.30 மணியளவில், சிறையில் இருந்த மின்கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்த அவரின் பெற்றோர்கள் மற்றும் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர், அவரது உடலை பிரேதபரிசோதனை செய்யும் குழுவில், தங்கள் சார்பாக ஒரு தனியார் மருத்துவர் இடம் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  

இதனால் மரணம் அடைந்து 15 நாட்கள் ஆகியும் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராம்குமாருடைய தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவரை நியமித்தது. அவரோடு சேர்ந்து மொத்தம் 5 மருத்துவர்கள் நேற்று அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள். அதன்பின் ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது உடலில் 6 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அந்த காயங்கள் மின்சாரம் தாக்கி ஏற்பட்டதா என்பது பற்றி தெரியவில்லை. எனவே அந்த இடத்திலிருந்த தசையை எடுத்து, ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அந்த ஆய்வு கூடத்தில், ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் வர இன்னும் 15 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இந்நிலையில், ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை போலீசார் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.