அதிரையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் ! ( படங்கள் )எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஹம்சத் பாட்சா, மாநில பொதுச்செயலாளர்கள் பி.அப்துல் ஹமீது, எம்.நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் ஏ.அப்துல்சத்தார், டி. ரத்தினம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.“காவேரி மேலாண்மை வாரியம்” அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து அக்டோபர் 13,14 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் தொகுதி வாரியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டங்கள் நடத்துவதோடு காவேரி குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள போராட்டங்களுக்கு அனைத்து மாவட்டத்திலும் எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும்.

2. மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று மீண்டும் அரசு பணியினை மேற்கொள்ள வாழ்த்துவதோடு அதுவரை அரசு நிர்வாகத்தை முன்னெடுக்க துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை அரசு நியமிக்க வேண்டும்.

3. கோவை சசிகுமாரின் மரணத்தை வைத்து கோவையில் திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றி பொதுசொத்துகளை சேதப்படுத்தி பொருட்களை சூறையாடி சென்ற இந்துமுன்னணி மற்றும் பாஜகவினரிடம் நஷ்டயீடு பெற்று அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

4. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டுவர துடிக்கும் “சரக்கு பெட்டக மாற்று முனையம்” திட்டத்தை கைவிட்டு உடனே குமரி மக்களின் நீண்டகால கோரிக்கையான குளச்சல் வர்த்தக துறைமுகத்தை அமைத்திட வேண்டும்.

5. தஞ்சை மாவட்டத்தில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக “மீன் பதப்படுத்தும் நிலையம்” தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அமைக்க வேண்டும்.

6. நீண்டகாலமாக ஆமைவேகத்தில் நடைபெறும் நூற்றாண்டு பழமையான திருவாரூர்-காரைக்குடி ரயில்பாதையினை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். என 6  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.