எடிஹாட், எமிரேட்ஸ் விமானங்களில் சாம்சங் நோட் 7 மொபைலுக்கு நிரந்தர தடை !சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 எனும் புதிய மாடலின் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தயாரிப்பு தொழிற்நுட்ப கோளாரால் உலகின் பல இடங்களில் வெடித்தும், தீப்பிடித்தும் வந்ததை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் இந்த மாடல் தயாரிப்பை முழுமையாக கைவிட்டதுடன் இவ்வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தையும் சந்தையிலிருந்தும் திரும்பப் பெற்று வருகின்றன.

கடந்த மாதங்களில் ஒரு சில விமானங்களிலும் இந்த ஸ்மார்ட் போன்கள் தீப்பிடித்ததை தொடர்ந்து தற்காலிகமாக விமானங்களில் பயன்படுத்துவதற்கும், ரீ சார்ஜ் செய்வதற்கும் எடிஹாட், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபை ஆகிய விமான நிறுவனங்கள் தடை விதித்திருந்தன.

தற்போது மேற்படி விமான நிறுவனங்கள் பயணப் பொதிகளிலோ (Checked-in Baggage) அல்லது கையில் கொண்டு செல்லும் பைகளிலோ (Cabin Baggage) சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்கள் மாடல்களை எடுத்துச் செல்ல முற்றிலும் தடைவிதித்துள்ளன.

தனிநபர்களின் உரிமையை விட ஒட்டுமொத்த பயணிகளின் நலனே முக்கியமென்பதால் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றும், இத்தடையால் பாதிக்கப்படுபவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளன.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.