7 வருட இரகசியம் வெளியாகிறது..!! பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை..! பசில் ராஜபக்சேவின் கருத்தால் பற்றி எரிகிறது இலங்கை!7 வருட இரகசியம் வெளியாகிறது..!! பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை..! பசில் ராஜபக்சேவின் கருத்தால் பற்றி எரிகிறது இலங்கை!

கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும் விடுதலை புலிகளின் தலைவரின் மரணம் என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது.

சமீபத்தில் கமால் குணரத்ன ஆரம்பித்து முதல் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பிரபாகரன் மரணம் தொடர்பாக மகிந்தா ராஜபக்சே, பொன்சேகா, கோத்தபயா அனைவருமே பின்வாங்க முயலும் கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனையும் தாண்டி தற்போது பசில் ராஜபக்சே கூறியுள்ள கருத்து பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதாவது விடுதலை புலிகளின் தலைவர் இறக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பசில் முன் வைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனாலும் தற்போது அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என பசில் கூறி உள்ளார். பிரபாகரன் மரண சான்றிதழ் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போதும் அது தொடர்பாக கடந்த ஆட்சியாளர்கள் எந்த கருத்தையும் கூறவில்லை.

அதே வேளை, இதுவரையிலும் வெளிப்படுத்தப்படாத இரகசியம் தற்போது வெளிப்படுத்த முயற்சி நடக்கிறது. அது மட்டும் அல்லாமல் 7 ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் ரகசியத்தை தற்போது வெளிப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போதைய ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

thanks To Kalaimalar.net
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.