என்கவுண்டரில் 8 முஸ்லிம் கைதிகள் கொல்லப்பட்டனர் - உவைஸி கடும் கண்டனம்



போலீசார் நடத்தும் ஒவ்வொரு எண்கவுண்டர்களுக்கும் பின்னால் அவை போலி எண்கவுண்டர்கள் என கூறி சர்ச்சை வெடிப்பது உண்டு. இதற்கு காரணம் இதற்கு முன்பு நடைபெற்ற பல எண்கவுண்டர்கள் போலியானவை என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதே.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிமி இயக்கத்தை சார்ந்த தீவிரவாதிகள் எனக் கூறப்படும் 8 பேர் சிறையை உடைத்துக் கொண்டு தப்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஐதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அசதுதீன் உவைசி தெரிவித்துள்ளார். அவர்கள் தப்பிய சம்பவத்தை காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் வெவ்வேறு கோணங்களில் விளக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை சாதாரண மனிதன் நிச்சயம் நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார். கொல்லப்பட்டோர் விசாரணை கைதிகள் என்றும் அவர்கள் தங்களது வழக்கமான ஆடைகள் மற்றும் ஷூ, வாட்ச் அணிந்திருப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர் பாதுகாப்பு உள்ள போபால் சிறையில் இருந்து எப்படி தப்பினார்கள் என்பதை உயர்மட்ட விசாரணை வைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் பாதுகாப்புள்ள புழல் சிறையில் ராம் குமார் உயிரிழந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.