முத்துப்பேட்டையில் கட்டி முடிக்கப்படாத வடிகால்கள் 95 லட்சம் சுவாக.... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் கடந்த  5 வருடங்களுக்கு முன் பேரூராட்சி சார்பில் ரூ 95 லட்சம் மதிப்பீட்டில் திருத்துறைப்பூண்டி சாலையில் வெள்ளைகுளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு பக்கமும் கழிவு நீர் வடிகால் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. இரவு பகல் பாராமல் பணிகளை துவக்கிய பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பால் பணியை பாதியில் நிறுத்தினர். அதனால் பணிகள் முழுமை பெறாமல் பாதியில் கிடப்பில் போடப்பட்டது.

அன்று முதல் இதுவரை அந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்து முடிக்கவில்லை. அதனால் பணி நடைபெற்ற இடங்களில் உள்ள கழிவு நீர் வடிகாலில் அப்பகுதி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் லாட்ஜ்களிலிருந்து  வரும் சாக்கடை நீர் வடிய வழியின்றி வருடக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பணியால் 5  வருடமாக ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி வடிய வழியின்றி நிற்பது  ஒரு கொடுமையான அவலமாக உள்ளது.

மேலும் இப்பகுதியில் பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வடிய வழியின்றி திறந்து கிடக்கும் இந்த சாக்கடை நீரால் நோய்கள் பரவி வருவது ஒரு புறம் இருந்தாலும், அடிக்கடி திறந்து கிடக்கும் வடிகாலுக்குள் மக்களும், வாகனங்களும் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் கூறுகையில், 5 வருடத்துக்கு முன் முறைகேடாக போடப்பட்ட இந்த கழிவு நீர் வடிகால் திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. பணியை 15 சதவீதம் கூட முடிக்காமல் முழு பணத்தையும் சுருட்டி விட்டனர்.

இதனால் பாதிக்கப்படுவது இப்பகுதி மக்கள்தான். இது குறித்து அப்போதைய கலெக்டரிடம் புகைப்படங்களுடன்  பலமுறை முறை புகார் தெரிவித்துவிட்டேன். எந்த பலனும் இல்லை. ஒரு முறை பேரூராட்சியில் தேங்கி நிற்கும் இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்த வாக்குவாதம் செய்து கோரிய போது என் மீது போலீசில் புகார் கொடுத்து  நடவடிக்கை எடுத்தனர். நான் கலெக்டரிடம் புகார் கொடுத்தேன் என்ற காரணத்தினால் ஒருமுறை முறைப்படி கட்டியிருக்கும் எனது வீட்டை பேரூராட்சி நிர்வாகம் அளவீடு செய்து என்னை பயமுறுத்தினர்.
ஆனாலும் நான் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். தினம்தினம் கொசுக்கடியால் இப்பகுதி மக்களும், நாங்களும் குழந்தைகளை வைத்துக்கொண்டு பரிதவித்து வருகிறோம் என்றார்.

நன்றி : தினகரன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.