கோவையில் மீண்டு காவிகளின் பயங்கரம் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!!கோவையிலுள்ள போத்தனூர், மேட்டூர் அம்மன்புரம் பகுதியில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. நேற்று மர்ம நபர்கள் பைக்குகளில் வந்து அந்த வழிபாட்டு தலம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனையடுத்து, பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அலறியடித்த மக்கள் வந்து பார்த்தனர். அங்கு பெட்ரோல் குண்டு வெடித்ததால் கண்ணாடி துண்டுகள் கீழே சிதறிக் கிடந்தன. வழிபாட்டு தலத்துக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுபற்றிய புகாரின் பேரில், கோவை தெற்கு பகுதி உதவி கமிஷனர் அனிதா, மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பெட்ரோல் குண்டின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை தேடும் பணியில் கோவை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.