ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது: முழுவதும் வீடியோ எடுக்கப்டுகிறதுசுவாதி கொலை வழக்கு குற்றவாளியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18–ந்தேதி அன்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். புழல் மத்திய சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து, மின்சாரத்தை உடலில் பாய்ச்சி நூதனமான முறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.

ராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் அரசு டாக்டர்களுடன், தனியார் மருத்துவமனை டாக்டரும் பங்கேற்க வேண்டும், என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, அரசு டாக்டர்கள் 4 பேர் குழுவுடன் சேர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்த உள்ளார். இதற்காக அவர் இன்று சென்னை வந்தார்.13 நாட்களுக்கு பிறகு ராயப்பேட்டையில் ராம்குமார் மருத்துவ பரிசோதனை தொடங்கியது.  சென்னை மருத்துவர்கள் 4 பேருடன் இணைந்து அவரும் தற்போது பிரேத பரிசோதனையில் பங்கேற்றுள்ளார்.

ராம்குமார் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது.
2 மணி நேரத்திற்கு மேலாக பிரேத பரிசோதனை நடைபெறும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.