இதயம் காக்க இப்படியும் ஒரு வழி! இருக்கிறதுநீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதில்லை என்பது நமக்கும் தெரியும்தான். நம் வேலைமுறையே அப்படி இருக்கும்போது நாம் என்னதான் செய்வது?‘இனி புலம்புவதை விடுங்கள்…. அதற்கும் ஒரு வழி இருக்கிறது’ என்கிறார் கொலம்பியாவின் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாமி படிலா. ‘நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் காலாட்டிக்கொண்டே இருந்தால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு’ என்று டிப்ஸ் தருகிறார் ஜாமி படிலா.

இதற்காக 11 பேரை ஓரிடத்தில் 3 மணி நேரம் தொடர்ந்து அமரவைத்து ஆய்வு மேற்கொண்ட பிறகே இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ‘ஆய்வு நடந்தபோது ஒரு நிமிடம் தங்களுடைய ஒரு காலை அங்கும் இங்குமாக அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதன்பிறகு அந்த காலுக்கு 4 நிமிட ஓய்வு கொடுக்க வேண்டும். இதேபோல மற்றொரு காலிலும் செய்யுமாறு சொல்லப்பட்டது.

ஆய்வுக்கு முன்னரும், பின்னரும் அவர்களுடைய கால் நரம்பு செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது முழங்காலின் பின்புறம் மற்றும் கால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்திருந்தது’ என்கிறார் அவர். இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீமதியிடம் இந்த ஆய்வு பற்றிக் கேட்டோம்…‘‘கணிணியில் வேலை பார்ப்பவர்கள், அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பார்ப்பவர்கள், வீடியோ கேம் விளையாடுபவர்கள், அமர்ந்தபடியே நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் உள்ள ரத்த ஓட்டம் தடைபடுவதன் காரணமாக இதயத்தின் தமனி ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதே இதன் காரணம். அதனால் அவ்வப்போது கைகள், கால்களை மடக்கி நீட்டுவது நல்லது. அதிக நேரம் எந்த அசைவுமின்றி அமர்வதைத் தவிர்ப்பதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது இதயத்தைப் பாதுகாக்கும்.

அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாதபட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பதுபோல காலாட்டிக்கொண்டே இருப்பதும் பலன் தரும் என்பதை மறுக்க முடியாது. இதன்மூலம் கால் மற்றும் கால் மூட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதற்காக, காலாட்டினால் மட்டுமே இதயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று சொல்ல முடியாது’’ என்கிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.