முத்துப்பேட்டை அருகே பரபரப்பு கூலிப்படையினர் ஐந்து பேர் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை.முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஐந்து பேர் சிக்கினர். கூலிப்படையா? போலீசார் தீவிர விசாரணை

முத்துப்பேட்டை  தில்லை விளாகம் அருகே மர்ம நபர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து முத்துப்பேட்டை காவல் துறை இன்ஸ்பெக்டர்  தலைமையில் போலீசார் விசாரணைக்காக சென்றபொழுது  அந்த மர்ம நபர்கள்  கஞ்ச போதையில்  முன்னுக்கு பின் முரணாக  பதில் அளித்து  தங்களிடம் இருந்த ஆயுதங்களினால் போலீசாரை தாக்க முயற்சித்துள்ளனர்  இதை அறிந்து சுதாரித்துக்கொண்ட  போலீசார்

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து     கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கூலிப்படை தங்கியிருந்த வீட்டை போலீசார் சுற்றிவளைத்து  துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது ...

கைது செய்த கூலிப்படையினர் இப்பொழுது  முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கிறது   விசாரணையின்  முதல் கட்டமாக அவர்கள் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்று மட்டும் தெரியவந்துள்ளது  அவர்களிடமிருந்து  பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ....


மேலும் அவர்கள் என்ன நோக்கத்திற்காக முகாமிட்டுருந்தார்கள்  என்ற விபரம் இல்லை  கடந்த சில நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை
கோவிலூர் பகுதியில் கூலிப்படையினர்  தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்  சென்னை போலீசாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்ற பட்டது  குறிப்பிடத்தக்கது .....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.