மூன்று உயிர்களை பழிவாங்கி தானும் உயிர் விட்ட நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டி - அதிர்ச்சி தகவல்கள் யார்  இந்த முத்துபாண்டி? வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

தென்காசியில் நாட்டு மருந்து தயாரித்த முத்துபாண்டி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் என்ன வகையான மருந்து தயாரித்தார் என்ற பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கும் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆண்மைக் குறைபாடு, நீரழிவு, உடல்பருமன், கை, கால், முதுகு வலிகளுக்கு நாட்டு மருந்து சிகிச்சை அளிக்கும் ஏராளமான வைத்திய சாலைகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெற தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த 22-ம் தேதி, தென்காசியை சேர்ந்த வைத்தியர் முத்துபாண்டி, தயாரித்து கொடுத்த பச்சிலை கசாயத்தை சாப்பிட்ட பாலசுப்பிரமணியன், இருளாண்டி, சௌந்திரபாண்டி ஆகியோர் இறந்தனர். இந்த சம்பவத்தில் முத்துபாண்டியும் அதை சாப்பிட்டதால் அவரும் பலியாகினார். நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மருந்து தயாரித்துக் கொடுத்த முத்துபாண்டியும் இறந்ததால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருப்பினும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் முத்துபாண்டி தயாரித்து மீதி வைத்த மூலிகைகளின் மாதிரிகளை சேகரித்த தமிழ்நாடு சித்த மருத்துவ மருந்து துறையினர் அது எந்த வகையானது என்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வின் முடிவுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில் முத்துபாண்டி, வைத்தியரே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், "பரம்பரை, பரம்பரையாக நாட்டு மருந்து வைத்தியம் செய்பவர்களுக்கு ஆர்.ஐ.எம்.பி என்ற லைசென்ஸ் சில நடைமுறைகளுக்குப் பிறகு வழங்கப்படும். அந்த லைசென்சும் சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. முத்துபாண்டி, எங்களிடம் எதுவும் லைசென்ஸ் பெற்றுள்ளாரா என்று ஆராய்ந்தோம். அப்போது அவர் எந்தவித லைசென்சும் பெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் நாட்டு மருந்து சிகிச்சை அளிக்கவே தகுதியில்லாதவர். அவர், மக்களிடம் தன்னை நாட்டு மருந்து வைத்தியர் என்று சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். அவரும் உயிர் இழந்ததால் இந்த வழக்கில் எங்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக முத்துபாண்டி தயாரித்த மூலிகை எந்த வகையைச் சேர்ந்தது. அதன் மூலம் என்ன மருந்து தயாரிக்கலாம். அந்த மருந்தில் என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று சோதனைகள் நடக்கின்றன. அதன் முடிவுகள் வரும்போதே இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த விவரங்களை தமிழக அரசுக்கு முதற்கட்ட அறிக்கையை சமர்பித்துள்ளோம். சோதனை முடிவு வந்தபிறகு விரிவான அறிக்கை சமர்பிக்கப்படும்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு நெல்லை மாவட்டத்தில் நாட்டு மருந்து சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் லைசென்ஸ் இல்லாத 4 வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். மேலும், நாட்டு மருந்து சாப்பிட்டு உயிர் இழந்த சம்பவம் தொடர்பாகவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்" என்றனர்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தென்காசி முழுவதும் போலி வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் சிகிச்சை அளித்தவர்களை கைது செய்து வருகிறோம். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வைத்தியர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் புகார் கொடுக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.