கோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு!இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் சசிகுமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு மதமோதலே காரணம்; சர்வதேச சதியெல்லாம் இருக்கிறது எனக் கூறி இந்து முன்னணியின் வெறியாட்டம் போட்டனர்.

இந்த நிலையில் திடீரென இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது நீதித்துறை நடுவர் கோபிநாத்திடம் வாக்குமூலம் கொடுத்த ஆனந்த், சசிகுமார் கொலை வழக்கில் போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என அஞ்சி தீக்குளித்ததாக கூறியிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.