பாசிசத்தின் பிடியில் இந்தியா.! எதிர்நோக்கும் ஆபத்து?பாசிசம், இனசுத்திகரிப்பு இரண்டும் வேறல்ல. இனசுத்திகரிப்பு செய்ய கையாளும் ஆயுதமே பாசிசம்.
20ஆம் நூற்றாண்டுதான் பாசிசம் என்ற வார்த்தையே மனிதகுலம் அறிந்த காலம். அதற்கு முன்னர் வாழ்ந்த நல்லோர்களுக்கு இது தெரியாது. ஏன்என்றால்19ம் நூற்றாண்டு வரை ஓரளவு சிறந்தவர்கள் வாழ்ந்த காலம் எனலாம். நாடுகளுக்கு இடையேயான போர் மட்டுமே அவர்களறிந்தது.
இன அழித்தொழிப்பு என்ற சிந்தனை தோன்றாத காலமது.
பாசிசத்தால் ஒரு இனத்தை அழிக்க முடியுமா?முடிந்ததா?என்ற கேள்விக்கு முடியாது என்பதே காலம் தந்த பதில்.
இது பாசிஸ்டுகளுக்கும் தெரியும்.இருந்தும் முயன்று பார்க்கிறார்கள். ஹிட்லரால் யூத இனத்தை துடைத்தெறிய முடிந்ததா?
கொஞ்சம் யூதர்களைக் கொன்றான்.இன சுத்ததிகரிப்பு ஈடேறவில்லை. ஜெர்மனியும் இத்தாலியின் முசோலினியுமே இதன் முன்னோடிகள்.அங்கே இருந்துதான் பாசிசம் இந்தியாவுக்கு இறக்குமதியானது.
பாசிசம் என்றால் என்ன ?
முதலாம் உலகப்போரின் போது இத்தாலி நாட்டில் தோன்றியதுதான் பாசிசம். உலகெங்கும் உள்ள அறிஞர்களால், வலதுசாரி தீவிரவாதம் பாசிசம் என்று அழைக்கப்படுகிறது. பாசிசத்தின் தன்மை என்று விக்கிபீடியா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
To achieve its goals, the fascist state purges forces, ideas, people, and systems deemed to be the cause of decadence and degeneration Fascism promotes political violence and war as forms of direct action that promote national rejuvenation, spirit and vitality. Fascists commonly utilize paramilitary organizations to commit or threaten violence against their opponents.
அதாவது தனது நோக்கத்தை அடைவதற்காக பாசிஸ்ட் அரசு, மக்களின் சுதந்திரம், சிந்தனை ஆகியவற்றை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். அரசியல் ரீதியான வன்முறை மற்றும் போர் ஆகியவை தேசிய புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதால், அவற்றுக்கு பாசிஸ்ட் அரசு ஊக்கம் கொடுக்கும். தன் எதிராளிகளை அடக்குவதற்காக தன்னிடம் உள்ள காவல்துறை மற்றும் துணை ராணுவப்படைகளை ஏவி விடுவதாக மிரட்டும்.
இதனை இந்தியாவுக்கு இறக்குமதி செய்த மகான் டாக்டர் மூஞ்சே(1872-1948).
RSS ஸ்தாபகர்களில் ஒருவர். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சித்பவன பிராமணர். மருத்துவர் வேறு. ஆண்டு 1931.
ப்ரண்ட்லைன் இதழ் ஜனவரி் 23,2015 இதழ் மூஞ்சே & முசோலினி என்ற கவர் ஸ்டோரி போட்டுள்ளது.
இந்த பாசிசம் எங்குமே செயல்பட ஓர் எதிரியைக் கட்டமைத்துக் கொள்ளும்.
முசோலினி Vs கம்யூனிசம்
ஜெர்மனி Vs யூதர்கள்
ஹிந்துத்வா Vs முஸ்லிம்கள்
இங்கே பாசிசம் அது ஏன் செயல்படுத்தப்படுகிறது என பாசிஸ்டுகளைக் கேட்டால் இறந்து புதைந்து போன பொய்களைக் கூறுகிறார்கள்.
முன்னர் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார்கள்; கோயில்களை உடைத்தார்கள்; மசூதிகளைக்கட்டினார்கள். எனவே நாங்கள் இன்று பாசிஸ்டுகளாக மாறி மீண்டும் அனைத்து இந்தியர்களையும் இந்துக்களாக்குவோம்.மசூதிகளைக் கோவில்களாக்குவோம். என்ற அறிவுக்குப் பொருந்தாததைக் கற்பனை செய்தே பாசிசம் வாழும்."நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை " என்ற அறிவிலியான பதிலும் இவர்கள் கைவசம் இருக்கும்.
இவர்களின் பொய்க்கூற்று ஒன்றின்படி சுமார் 8 கோடி இந்துக்கள் முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பால் கொல்லப்பட்டார்களாம்.
ஆதாரம்:
நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை.
இதனைச் சொல்லித்தான் பாசிசம் பயணிக்கிறது. இதனால் விளையும் விளைந்த விளையவிருக்கிற ஆபத்துக் கள் கொஞ்சநஞ்சமல்ல.
இதன் தொடர்ச்சியே......
மதவெறி, சாதிவெறி அரசியல், பாபர் மசூதி இடிப்பு ,பாகல்பூர்,பம்பாய், குஜராத், அஸ்ஸாம்; ஹரியானா, முசாபர் நகர் கலவரங்கள். RSS சங்பரிவாரால் நடத்தபடட்ட குண்டுவெடிப்புகள், மாட்டு அரசியல், தலித்கள் மீதான தாக்குதல், கிருஸ்தவர்கள் மீதான தாக்குதல், மாட்டுக்காக மனிதனை கொலை செய்வது, மதவாத வெறுப்பு மதவெறி பேச்சுக்கள், இன்னும் அநியாய படுகொலைகள். இவை அனைத்தும் பாசிசத்தின் கோரமுகமே. இந்த RSS பாசிஸ்டுகளின் கையில் தான் இந்தியா என்ற பூங்கொத்து உள்ளது. இதை சிதைப்பது தான் பாசிஸ்டுகளின் நோக்கம்...அது தான் ஒற்றை கலாச்சாரம் இந்து, இந்தி, இந்துஸ்தான்.
பாசிசத்தை முதலில் விளங்கிக்கொள்வோம். பின்னர் வீழ்த்தி விடுவோம். இந்தியா எதிர்நோக்கும் ஆபத்து பசி பஞ்சம் பட்டினி பிணியல்ல, அது RSS பாஸிசம் எனும் பேராபத்தே!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.