மாட்டுச்சாணத்தை மிதித்த தலித் சிறுவனின் விரலை வெட்டிய இந்துத்துவ குண்டர்கள்உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் காயவைத்திருந்த மாட்டுச்சாணத்தில் தலித் சிறுவன் ஒருவன் தவறுதலாக மிதித்ததால் அவரது கைவிரல் ஒன்றை வெட்டியுள்ளனர் சாதி வெறியர்கள்.

எட்டு வயது நிரம்பிய ஆர்யன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு காய வைக்கப்பட்டிருந்த மாட்டுச்சாணத்தில் தவறுதாலாக மிதித்து விட்டார். இதில் கோபமடைந்த 60 வயது ரமேஷ் ஆர்யனின் இடது கைவிரல் ஒன்றை வெட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம், துண்டிக்கப்பட்ட கைவிரலுடன் ஆர்யனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ரோஹ்தாஸ் குமார் காவல்நிலையம் விரைந்ததும் தங்களுக்கு தெரிய வந்ததாக லுக்ஸர் பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி தினேஷ் குமார் கூறியுள்ளார். காயமடைந்த சிறுவன் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளான்.

இந்த கொடூரச் சம்பவத்தை அடுத்து ரமேஷ் குமார் மீதும் அவரது 24 வயது மகன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளான தந்தை மகனை கைது செய்ய தேடுதல் வேட்டை நடக்கிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி : புதிய விடியல்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.