பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த யாஸ்மின் என்ற இளம்பெண் குத்தி கொலைபண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இளம்பெண்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி யாஸ்மின்(வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சுலைமான் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

வீட்டில் யாஸ்மின் மட்டும் தனியாக இருந்தார். பக்கத்து தெருவில் வசிக்கும் யாஸ்மினின் தாய் பர்வீன் மாலை 3 மணியளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் யாஸ்மின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.

அவர் அலங்கோலமான நிலையில் கிடந்ததுடன், அவர் அணிந்திருந்த தாலி, மோதிரம் என்று 6½ பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல்போய் இருந்தது. இதை பார்த்து பதறிப்போன பர்வீன், கூச்சலிட்டப்படி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பலாத்காரம் செய்து கொலையா?
வீட்டில் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது.

தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாஸ்மினின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: லால்பேட்டை எஸ்பிரெஸ்
Share on Google Plus

1 comments:

  1. இவையெல்லாம் மீடீயாவில் வராதது கவலையளிக்கிறது

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.