இந்துத்துவ மனநிலை என்றால் என்ன? இந்த வீடியோவை பாருங்கள்.இது பீகார் மாநிலம் முசாபர்நகர் கேந்திரிய வித்யாலய பள்ளியில் சென்ற வாரம் நடந்த கொடுமை.
ஒரு மாணவரை இரண்டு மாணவர்கள் மிக கொடூரமான முறையில் தாக்குகிறார்கள். காரணம் என்ன?
அந்த மாணவன் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெறுகிறான் என்பது தான் காரணம். இது இயல்பானதுதானே ஆனால் ஏன் தாக்குகிறார்கள் என எண்ணக் கூடும். இங்கு தான் இந்துத்துவ, பார்பனீய சிந்தனையின் கொடுமை வெளிப்படுகிறது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவன் ஒரு "தலித்". ஒரு தலித் மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதையே ஏற்றுக்கொள்ள இயலாமல் , படிநிலையில் அடுத்த படிநிலையில் இருப்பதாக பார்பனீயத்தால் கற்பிக்கப்பட்டு அது மூளையில் ஏறிப் போன காரணத்தால் இவன் அவனை தாக்குகிறான்.
பார்பான் பார்பனர்அல்லாத யாருக்கும் கல்வி கற்கும் உரிமையை மறுத்தான். பார்ப்பனர் அல்லாதவன் படித்தால் நாக்கை வெட்டு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என மனுதர்மம் கூறுதிறது.
பார்பனர் அல்லாத மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்றுக் கொடுக்க புரட்சியாளர் அம்பேத்கர், பேராசான் பெரியார் போராடிய போராட்டமே அடிக்கும் இந்த மாணவனுக்கு கூட கல்வி கற்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தது என்பதே வரலாறு.
ஜாதி வெறி ஏறிப் போன இந்த மாணவனுக்கு இந்த வரலாறு தெரியாமல் போனது கூட இப்படி அவன் நடந்து கொள்வதற்கு பெரிய காரணம் இல்லை. அவன் மூளையில் பார்ப்பனீயம் போதிக்கும் வருணாசிரம தர்ம ஜாதிய படிநிலை வேறுபாடு வலுவாக ஏறி நிற்கிநது. இதனை களைய அண்ணலின், அய்யாவின் உழைப்பை சொல்லும் போது பார்பனீய, இந்துத்துவ மனநிலையின் கொடுமையையும் அழுத்தமாக பதிவு செய்வது அவசியமாகிறது.
அடிக்கும் மாணவன் மட்டுமல்ல அந்த பள்ளியின் பிரின்சிபல் இதற்கு உடந்தை.15 ஆசிரியர்கள் உடந்தை. இப்போது அவர்கள் மீது 'மென்மையான' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்களுக்கு அந்த மாணவனை தண்டிப்பதல்ல நிரந்தர தீர்வல்ல. அது ஒரு தாற்காலிக தீர்வுதான்.
ஜாதி வெறியை நிரந்தரமாக அகற்ற பார்பனீயத்தை வேரறுப்போம்!
இந்துவத்தை கருவருப்போம்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.