முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 57). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற போது முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த மோட்டார்சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த அந்த நபரை தேடிவருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.