முஸ்லிம்கள் கவனத்திற்கு: நீண்டகால இஸ்ரேலின் திட்டமே அப்பிள் போன்!



அப்பிள் நிறுவனம் அண்மையில் ஐபோன் 7 மற்றும் பிளஸ்ஸை வெளியிட்டது.

இந்நிலையில் அப்பிள் தனது ஐபோன் 8 இற்கான வன்பொருள் தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலில் அப்பிள் அலுவலகமொன்றில் இரகசியமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபோன் 8 தொடர்பாக தொடர்ச்சியாக பல தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன.

ஐபோன் வெளியிட்டு அடுத்த வருடத்துடன் 10 ஆண்டுகள் பூர்த்தியடைவதால் ஐபோன் 8 சிறப்பாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

edge-to-edge திரை , சிறப்பான கெமரா என பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐபோன் 8 இன் வன்பொருட்கள் இஸ்ரேலியின் ஹேர்ஸ்லியாவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவன ஊழியரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பொதுவாக அப்பிள் 5 இற்கு பின் 5எஸ், 6 இற்கு பின் 6எஸ் என வெளியிட்டு வந்த நிலையில், 7 இற்கு பின் 7எஸ் ஐயே வெளியிடுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அப்பிள் ஐபோன்8 ஐ வெளியிடப்போவதாக கூறப்படுவது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  அப்பிள் அலுவகத்தில் சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனராம்.  சுமார் 1 வருடமாக இயங்கி வரும் மேற்படிஅலுவலகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு இடம்பெறுவதாகவும் , சிப்கள், ஸ்டோரேஜ்கள் , கெமராக்கள் , கம்பியில்லா தொழில்நுட்பங்கள் போன்றவையே அங்கு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் அப்பிள் நிறுவனம்  மேலும் ஒரு அலுவலகத்தை கொண்டுள்ளது, வட இஸ்ரேலின் ஐபா நகரில் இயங்கும் இந்த  நிறுவனத்தில் சுமார் 200 பேர் பணிபுரிகின்றனர்.

இஸ்ரேல் முஸ்லிம்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒரு OS ஐ பயன்படுத்தி வந்ததாக பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம் அந்த மறைமுக திட்டம் இந்த செய்தி மூலம் வெளியாகியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.