ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ரகா நகரை துருக்கி ராணுவம் தாக்கி மீட்கும் : - அதிபர் எர்டோகன்சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய நகரான ரகாவை துருக்கி ராணுவம் தாக்கும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி ராணுவம் சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பிடியில் உள்ள முக்கியமான பகுதி ரகா நகரம் ஆகும். இந்த பகுதியில் ஐ.எஸ் எதிராக தாக்குதல் நடத்தி வரும் அரசு எதிர் தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சிரிய ராணுவம் செயல்படும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எர்டோகன் தெரிவித்துள்ளதாவது:

கிளர்ச்சியாளர்கள் தற்போது ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரமான அல் பாப்பில் நெருங்கி வருகின்றனர். அந்த நகரை கைப்பற்றிய பிறகு அவர்கள் சிரிய குர்தீஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ள மன்பிஜ் பகுதியை குறி வைப்பார்கள். அதனை தொடர்ந்து சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ரகாவை நோக்கி செல்வார்கள்.

சிரியாவில் எந்தவொரு தீவிரவாத அமைப்புகளும் தேவையில்லை. டேனிஷ்(ஐ.எஸ்) அமைப்பையும் ரகா நகரில் இருந்து வெளியேற்றுவோம். உங்களுடன் சேர்ந்த அதனை செய்வோம். எங்களுக்கு அந்த வலிமை உள்ளது.

இவ்வாறு கூறினார்.

ரகாவில் எப்படி தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக விமான படையை அளிக்க விரும்புகிறது. ஆனால் துருக்கி சிரிய குர்தீஸ் தீவிரவாதிகளின் தலையீட்டை எதிர்க்கிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.