சாலை மறியலில் ஈடுபட்ட இர்ஃபான் - ஆயிஷா . ஜோடி! - வீடியோசரியான மார்க்க பற்றும் மார்க்க சிந்தனையும் இல்லாத சில பேர் செய்யும் இது போல காரியங்களால் சமுதாயத்திற்குத்தான் கெட்ட பெயர் ....

அல்லாஹ் நம்குடும்பத்தார்கள் அனைவரையும் பாதுகாப்பானாக ..

காதல் திருமணம் செய்த தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தம்பதியரை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபடனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த இர்ஃபான் என்பவர், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவரை, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இதை எதிர்த்து ஆயிஷாவின் தந்தை தொடர்ந்த வழக்கில், இருவரும் சேர்ந்து வாழலாம் என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இர்ஃபான் வீட்டிற்கு அடியாட்களுடன் வந்த ஆயிஷாவின் தந்தை, இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த, ஆயிஷா மற்றும் இர்ஃபான், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, கம்பம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

ஆனால் காவதுறையினர் அவர்களை கண்டுகொள்ளாததால், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தினர்.

அதன்பின்னர் அங்கு வந்த போலீசார், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.