பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்வதா! – சித்தராமையா ஆவேசம்!சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ருத்ரேஸ் என்ற நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர்.பின் அந்த கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்டையும் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியையும் தொடர்புபடுத்தி அதனை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பாஜக போராட்டத்தில் இறங்கியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் “ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலை வழக்கில் இதுவரைக்கும் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்புகளின் தலையீடு இருப்பதாக தெரியாத நிலையில் அவர்களை எப்படி தடை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடலோர கர்நாடகத்தில் சங்கபரிவார அமைப்புகள் செய்த கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.சிவ சென  மற்றும் விஷ்வ இந்து பரிசத்தை என்ன செய்வது ?என்று காட்டமாக பேசியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.