டீ வித்தவர் கோடிஸ்வரரானார் எப்படி?



சிறுவனாக இருந்த போது அஸ்ஸாம் டீயை வித்துட்டு இருந்தார்.

இளைய வயதில் டவுசர் அணிவதில் அலாதியான பற்று. சக டவுசர்களை உந்தித் தள்ளிவிட்டு ஒவ்வொரு பதவியாக உயர்ந்தார்.
அரசியலில் MLA ஆன பிறகு மற்றவர்களை முந்திக்கொண்டு அமைச்சர் பதவியும், அப்படியே முதலமைச்சர் பதவியையும் எட்டிப் பிடித்தார்.
பயங்கர ஆயுதங்களால் வெட்டியும், குத்தியும், கற்பழித்தும், எரித்தும் சுமார் 2,000 முஸ்லிம்களை கொல்ல தீவிரவாத டவுசர்களை ஏவிவிட்டார்.

அச்சத்தின் பிடியிலும், மதவெறி தலைக்கேறிய மக்களின் ஆதரவோடு மீண்டும் முதல்வரானார்.
வளர்ச்சி, மாபெரும் வளர்ச்சி என்று தவறான புள்ளி விபரங்களைக் காட்டி பரப்புரை செய்து கொண்டே இருந்த போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வளர்ச்சி, வளர்ச்சி என்ற வழக்கமான பொய்யைச் சொல்லி படித்த மக்களைக் கவர்ந்தார். கருப்புப் பணத்தை மீட்டு குடிமக்கள் அனைவருடைய வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று கூவிய இமாலயப் பொய்யை நம்பிய பாமர மக்களும் சேர்ந்து வாக்களித்த 30% ஓட்டில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார்.

ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்றதும் பாமரர்கள் அந்த 15 லட்ச ரூபாய் வரவு வைப்பதற்காக இருக்குமோ என்று எண்ணி மீண்டும் ஏமாந்தனர்.

தொடர்ச்சியாக கவர்ச்சியான பல திட்டங்கள். அதனால் மக்களின் மனது கிளுகிளுப்படைந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது
.
இவற்றையெல்லாம் மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்க அண்டை நாட்டுடன் நள்ளிரவில் போர், முத்தலாக், மீண்டும் ராமனுக்கு கோவில், பொது சிவில் சட்டம் என்று பரபரப்பைக் கிளப்பி மீதமுள்ள நாட்களை உலக சுற்றுப் பயணத்தில் கழிப்பார்.

அதுவரை இன்னும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்வார்களோ என்ற கவலையெல்லாம் டமிழ் மியூசிக்-குக்கு கிடையாது. ரத்தக் கறை படிந்தவரின் பெயரை மக்கள் தன் குழந்தைகளுக்கு சூட்டவேண்டுமாம். அதனைக் கொண்டாட இனிப்பு செய்தியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவார்கள்.

-நண்பனின் பதிவு.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.