துபாயில் வேலை தேடி செல்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!அமீரகத்தில் வேலை தேடி செல்பவர்களை, முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.

இந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

சிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

மேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சிலர் சட்டவிரோதமாக இந்த பணம் பறிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

அதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.