இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதுதிருப்பூரில் இந்து முன்னணியினர் மீது சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று தடையை மீறி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 1000க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது  செய்தனர். திருப்பூர் மாநகரில் சமூக அமைதிக்கு எதிராக செயல்படும்  இந்து முன்னணியினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து  முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்தி, மத பயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில்,  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் துரைசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ்  பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் முகில்ராசு, அமைப்பாளர்கள்  அருண், உமர்கயான், குணா, பஷிர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில தலைவர் கொளத்தூர்  மணி பங்கேற்றார்.

தடையை மீறி 32 சமூக அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கூடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, தேர்தல் விதிகளை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லையென  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால், இருதரப்புக்கும் இடையே  கடுமையான வாக்குவாதம் எழுந்தது. தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது  செய்தனர்.கைது செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்டவர்களை திருப்பூரில் உள்ள இரு தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.