தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக முத்துப்பேட்டை ஷேக் பரீத் நியமனம்!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஜே.ஷேக் பரீத். இவர் தற்பொழுது சென்னையில் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜே.ஷேக் பரீத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, சிறுபான்மை பிரிவு அகில இந்திய தலைவர் குர்ஷித் அகமத் சையத் ஆகியோரின் ஒப்புதல் பெற்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் அஸ்லம் பாஷா நியமனம் செய்துள்ளார். நியமனம் செய்யப்பட்ட ஷேக் பரீத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மாநில தலைவர் வழக்கறிஞர் அஸ்லம் பாஷா உட்பட நிர்வாகிகளையும் மற்றும் முத்துப்பேட்டை பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.