பட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைதுகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, இன்று ( அக்.13 ) மற்றும் நாளை அக்-14 -ல் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி கடந்த அக்-08 -ல் நடத்திய மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

அதன்படி, எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று காலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். போராட்டத்தின் போது பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ், பி.எஃப்.ஐ தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், எஸ்டிடியூ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அமானுல்லா, செயற்குழு உறுப்பினர் அன்வர் உள்ளிட்டபோராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.